Close Menu
    What's Hot

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»சபரிமலை அரவண பாயாசம் – ஒரு முறை வீட்டில் இப்படி செய்து ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்ங்க!
    LIFESTYLE

    சபரிமலை அரவண பாயாசம் – ஒரு முறை வீட்டில் இப்படி செய்து ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்ங்க!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fdd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான அரவண பாயாசம் பலரது ஃபேவைரைட். பள்ளி படிக்கும் போது, மாணவர்கள் அல்லது குடும்பத்தில் ஒருவர் சபரி மலைக்கு சென்று வந்தால், அரவண பாயாசத்தை அனைவருக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள். அதனை சாப்பிட்டதும் இன்னும் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். இப்படி தான் பலருக்கு அரவண பாயாசம் அறிமுகமாகியிருக்கும்.

    ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி 41 நாட்களுக்கு பின் சபரிமலைக்கு சென்று வருவார்கள். வரும்போது கட்டாயம் அரவண பாயாசம் வாங்கி வருவார்கள். அப்படி, அனைவருக்கும் பிடித்தமான மற்றும் ஐயப்ப சுவாமிக்கு உகந்த அரவண பாயாசத்தை பக்குவமாய் வீட்டில் கூட செய்யலாம். கீழ் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி, ஒரு முறை இந்த பிரசாதத்தை செய்து பார்த்து கார்த்திகை மாதத்தில் ஐயப்ப சுவாமிக்கு நைவேத்தியமாக படையுங்கள்.

    அரவண பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

    • கேரளா மட்டை அரிசி (சிவப்பு அரிசி) – 200 கிராம்
    • வெல்லம் – 400 கிராம்
    • தேங்காய் துண்டுகள் – 1 கப்
    • சுக்கு தூள் – 2 டீஸ்பூன்
    • முந்திரி பருப்பு – 100 கிராம்
    • தண்ணீர் – தேவையான அளவு
    • நெய் – தேவையான அளவு

    அரவண பாயாசம் செய்வது எப்படி?

    • அரவண பாயாசம் செய்வதற்கு முதலில் வெல்லத்தை கரைத்து கொள்ளலாம். அதற்கு, ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி பொடித்த வெல்லம் சேர்த்து கரைக்கவும். வெல்லம் நன்கு கலந்து வந்ததும், அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
    • இப்போது ஒரு அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுக்கவும். தேங்காய் பொன்னிறமாக வறுப்பட்டு வந்ததும் தனியாக மாற்றி வைக்கவும்.
    • இப்போது அதே பாத்திரத்தில் மீண்டும் நெய் விட்டு, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
    • இப்போது அரிசியை நன்கு கழுவி பாத்திரத்தில் சேர்த்து ஒன்னுக்கு ஐந்து அல்லது ஆறு பங்கு (ஒன்றரை லிட்டர்) எனும் கணக்கில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
    • தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து மூடி போட்டு அரிசியை வேக விடவும். சாதம் வெந்து வந்ததும், கரைத்து வைத்த வெல்லத்தை வடிகட்டி சேர்க்கவும்.
    • இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசியை நன்கு கலந்து விடவும். கூடவே சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும்.
    • பின்னர், மீண்டும் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பாயாசம் கொதித்து கட்டியாகி வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்போது வறுத்த தேங்காய் துண்டுகள் மற்றும் முந்திரியை சேர்த்து கலந்து மூடி விடவும். .
    • 10 நிமிடங்களுக்கு பின்னர், பாத்திரைத்தை திறந்தால் அரவண பாயாசம் தயார்.

    டிப்ஸ்:

    • கேரளா மட்டை அரிசி இல்லை என்பவர்கள் வேறு அரிசி வகைகளிலும் செய்யலாம். பாஸ்மதி அரிசியில் மட்டும் செய்யக்கூடாது.
    • அரிசியை குக்கரில் வேக வைத்தால் குழைந்து போக வாய்ப்புள்ளது. அதனால், பாத்திரத்தில் வேக வைக்கவும்.
    • அரவண பாயாசத்தில் பால் மற்றும் பருப்பு பொருட்கள் சேர்க்காததால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 08.12.2025
    Next Article நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை: 3 மணிநேரத்தில் மீட்பு
    Editor TN Talks

    Related Posts

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    May 16, 2026

    சுட்டெரிக்கும் வெயில்!. தாகத்தை தணிக்க ஐஸ் வாட்டர் குடிக்கிறீர்களா?.  உஷார்!

    April 29, 2026

    காலையில் எழுந்ததும் போன் பார்க்கிறீர்களா?. மூளைக்கு வரப்போகும் ஆபத்து!. நிபுணர்கள் வார்னிங்!

    April 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    Trending Posts

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.