Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»LIFESTYLE»குளிர்காலத்தில் செடி வாடிப்போகிறதா? இப்படி ஒரு முறை பண்ணி பாருங்க செடி செழிப்பா வளரும்!
    LIFESTYLE

    குளிர்காலத்தில் செடி வாடிப்போகிறதா? இப்படி ஒரு முறை பண்ணி பாருங்க செடி செழிப்பா வளரும்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    leaves
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வீட்டில் பல விதமான செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்டத்தை வைத்திருபவர்களுக்கு, குளிர்காலம் ஒரு சவாலான பருவம் தான். கடுமையான குளிர், பனி மற்றும் குறைந்த சூரிய ஒளி ஆகியவை செடிகளின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன. கோடை மற்றும் மழைக்காலத்தில் செழிப்பாக இருந்த செடிகள் கூட, குளிர்காலத்தில் வாடி, காய்ந்து போக ஆரம்பிக்கும்.

    ஆனால், சில எளிய மற்றும் சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால், வீட்டில் வளரும் செடிகள் இந்த குளிர்காலத்திலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இனி வரும் பருவ காலத்திலும் செடி செழித்து வளரும். அந்த வகையில், மற்ற காலங்களை போல் இல்லாமல் இந்த குளிர்காலத்தில் செடிகளை எப்படி பராமரிப்பது? செடி வாடிப்போகாமல் இருக்க என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    தண்ணீர் விடுவதில் கவனம்!

    • குளிர்காலத்தில் செடி பராமரிப்பில் நீர் நிர்வாகம் மிக முக்கியமானது.
    • குளிர்ந்த காலநிலையில், செடிகள் நீரை மெதுவாகவே பயன்படுத்தும். எனவே, கோடை காலத்தை ஒப்பிடும்போது, தண்ணீர் ஊற்றுவதை குறைப்பது அவசியம்.
    • செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதற்கு முன், தொட்டியின் மண்ணை விரலால் தொட்டுப் பார்க்கவும். மேல் மண் நன்கு காய்ந்திருந்தால் மட்டுமே தண்ணீர் விடவும். இது பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை போதுமானதாக இருக்கும்.
    • அதிகப்படியான தண்ணீர் விடுவதால், வேர்களில் ஈரம் தேங்கி, அவை அழுகிப்போகும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்ப்பது செடியின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம்.

    • சரியான இடம் மற்றும் பாதுகாப்பு!

      • செடிகளுக்குத் தேவையான வெப்பம் மற்றும் ஒளியைக் கொடுப்பது அவசியம்.
      • முடிந்தவரை செடிகளை அதிக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் குறைந்தது 3 மணி நேரம் வைக்கவும். இது செடியின் வெப்பநிலையைப் பராமரிக்க உதவும்.
      • கடுமையான குளிர் அல்லது பனி இருக்கும் இரவு நேரங்களில், தொட்டிச் செடிகளைப் பனியிலிருந்து பாதுகாக்க, வீட்டிற்குள் எடுத்து வைப்பது அல்லது ஒரு கூரை, துணியால் மூடுவது நல்லது. குறிப்பாக துளசி மற்றும் ரோஜா போன்ற மென்மையான செடிகளுக்கு இது மிகவும் அவசியம்.
      • செடியின் மண்ணை வெப்பமாக வைத்திருக்க, காய்ந்த இலைகள், வைக்கோல் அல்லது மரச் சில்லுகளை மண்ணின் மேல் பரப்பி (Mulching) மூடி வைக்கலாம். இது மண்ணின் வெப்பநிலையைப் பாதுகாப்பதோடு, ஈரம் ஆவியாவதையும் தடுக்கும்.

    உரம் மற்றும் சுத்தம்!

    • குளிர்காலத்தில் செடிகளின் வளர்ச்சி குறையும் என்பதால், அதிக உரம் தேவையில்லை.
    • குளிர்காலத்தில் செடிகள் ஓய்வு எடுக்கும் என்பதால், அதிகப்படியான உரத்தைத் தவிர்ப்பது நல்லது. குளிர்காலம் தொடங்குவதற்கு முன் ஒருமுறை உரம் இடுவது போதுமானது. வேப்பம் பொடியை மண்ணில் கலந்து விடுவது செடியின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
    • செடியைச் சுற்றியுள்ள களைகள், காய்ந்த இலைகள் மற்றும் பூக்களை அவ்வப்போது நீக்குவது, செடிக்குச் சரியான சத்துக்கள் கிடைக்க உதவும்.
    • செடிகளின் வேர்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்க, குளிர்காலம் தொடங்கும் முன் பழைய மண்ணை மாற்றி, புதிய மண்ணைக் கலப்பது செடி செழித்து வளர உதவும். இப்படி சரியான பாதுகாப்பு அளிப்பதன் மூலம், செடிகள் இந்தக் குளிர்கால சவாலை சமாளித்து, அடுத்த பருவத்தில் புதிய இலைகள் மற்றும் பூக்களுடன் அழகாகக் காட்சி அளிக்கும்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார்த்திகை விரதம்: களையிழந்த காசிமேடு மீன் மார்க்கெட்
    Next Article நீங்கள் அன்றாடம் குடிக்கும் தண்ணீரை இப்படி குடித்து பாருங்கள் ; வித்தியாசத்தை உணருவீர்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச யோகா தினம் 2026!. உடலையும் மனதையும் காக்கும் யோகாசனத்தின் அசாத்திய நன்மைகள்!

    June 21, 2026

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    June 18, 2026

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.