தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக மூத்த தலைவர் ஆதவ் அர்ஜூனா சவால் விடுத்தார்.

புதுச்சேரி கூட்டத்தில் பேசியபோது அவர் கூறியதாவது:

புதுச்சேரி கூட்டத்திற்கு காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு அளித்துள்ளனர். தமிழகத்தில் கூட இப்படி வழங்கப்பட்டதில்லை. தமிழக காவல்துறை குறித்து பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் இதை கவனிக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரம், காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு தவெகவை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம். தில் இருந்தால் தேர்தலில் தவெகவுடன் முதல்வர் ஸ்டாலின் மோத வேண்டும்.

2026-ல் தமிழக தேர்தலில் தவெக நிச்சயம் வெற்றி பெறும். முதலமைச்சராக தலைவர் விஜய் பதவியேற்பார். இதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version