புதுச்சேரியில் 2026-இல் தவெக ஆட்சியமையும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று தவெகவின் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது:

2026-ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெறும். தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பார். அதுபோல புதுச்சேரியிலும் தவெக ஆட்சியமையும்.

தமிழகத்தில் தவெக கூட்டம் எதற்கும் அனுமதி தருவதில்லை. ஆனால் தவெக காற்று போல. காற்றை தடுக்க முடியுமா. அதுபோல்தான் தவெகவையும் தடுக்க முடியாது.

என்ன செய்தாலும், தவெகவின் ஆட்சியமைவதை யாராலும் தடுக்க முடியாது. தவெக தலைவர் விஜய் மீது தமிழக மக்களும், புதுச்சேரி மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். கட்டுக்கோப்பாக கூட்டத்திற்கு தவெக தொண்டர்கள் வந்துள்ளனர். இதை காணு்ம்போது மகிழ்ச்சியாக உள்ளது.

தேர்தலுக்கு 3 மாதமே உள்ளது. இந்த காலகட்டத்தில் தவெகவினர் சிறப்பாக கட்சி பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றினால் புதுச்சேரியில் தவெகவின் ஆட்சி அமைவது உறுதி.

இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version