2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக களமிறங்கி பணிகளை தொடங்கிவிட்டனர். கடந்த காலங்களில் இல்லாதளவுக்கு அதிமுகவில் தற்போது உள்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் இது அந்தக் கட்சியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு பிரம்மாண்ட உணவு விருந்து வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். பொதுவாக தேர்தல் பணிகளில் அதிமுக மற்ற கட்சிகளைவிட அதிகம் வேகம் காட்டும். ஆனால் அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகளவில் இருப்பதால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது. இந்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது. சென்னை வானகரம் ஶ்ரீவாரு வெகங்டாசலபதி மண்டபத்தில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10 மணியளவில் அந்தக் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

கமகம விருந்து

இதில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 5,000 பேர் பங்கேற்கவுள்ளனர். தேர்தல் வியூகம், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளது. முக்கியமாக பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கமகம அசைவம் மற்றும் சைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 3,000 பேருக்கு சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 2,000 பேருக்கு சைவ உணவும், 3,000க்கும் மேற்பட்டோருக்கு அசைவ உணவும் தயாரிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு அவர்களின் இருக்கையிலேயே ஸ்வீட், காரம், பிஸ்கட், குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version