ஜெயலலிதாவுக்கு சசிகலா, மு.க.ஸ்டாலினுக்கு சபரீசன் போன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வீழ்ச்சிக்கு ஜான் ஆரோக்கியசாமி காரணமாகலாம் என பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சருக்கு, அவரது கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து சிறப்புக் குழு வாரம் ஒருமுறையோ அல்லது மாதத்துக்கு இருமுறையோ அறிக்கை தரும். அந்த அறிக்கையைப் படித்துவிட்டு, அதன்பேரில் அமைச்சர்களை மாற்றுவதோ, அதிகாரிகளை மாற்றுவதையோ முதலமைச்சர் மேற்கொள்வார்.
இப்படி கண்காணிப்பு சிறப்புக் குழு தரும் அறிக்கை முதலமைச்சர் பார்வைக்கு செல்வதற்கு முன்பே அவரது தனிப்பட்ட உதவியாளர்கள் தங்கள் கைகளில் கிடைக்கச் செய்து அதன்வழியாக தங்கள் காய்நகர்த்தலை ஆடுவது உண்டு.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு தரப்படும் அறிக்கையை முதலில் சசிகலா படித்து விடுவதாகவும், அதனை வைத்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் மிரட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதே போல் கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு தரப்படும் அறிக்கையை அவரது மருமகன் சபரீசன் முதலிலேயே படித்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக, திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு முதலமைச்சர்களை மீறி தனிப்பட்ட நபர்கள் செயல்பட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் அமைச்சர்கள், அதி காரிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள, சிறப்புக் குழு தரும் அறிக் கையை, முதல்வர் விஜய் படிப்பதற்கு முன்பே, அவரது வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி பார்வையிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த ரகசியங்கள் கசிய அதிக வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version