மைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவதூறான தகவல்களை பரப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான யூடியூப்பர் மாரிதாஸ் மீது அடுத்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் கைதாவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

யூடியூப் தளத்தின் மூலம் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான மாரிதாஸ், அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவதூறான தகவல்களை பரப்பியதாக நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரது கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸ், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மாரிதாஸ் மீது அடுத்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனது பெயர் தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ,  மாரிதாஸ், ஸ்ரீ ஐயர் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புகாருக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜான் பிரிட்டோ, “போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜான் பிரிட்டோ நானல்ல. எனக்கும் அந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

தான் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறிய அவர்,  என்னைப் பற்றியும், எனது குடும்பத்தைப் பற்றியும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக சில யூடியூப் சேனல்களில் போதைப்பொருள் வழக்குடன் என்னை இணைத்து செய்திகளும் கருத்துகளும் வெளியிடப்பட்டுள்ளன” என்றார்.

இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புகாரின் பேரில் மாரிதாஸ் மீண்டும் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version