பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக தமிழகத்தில் திராவிட இயக்கத்தில் இருக்கிறீர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருப்பதாக துரைவைகோ குறித்து மதிமுகவின் மல்லைசத்யா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் அளித்த பேட்டி வருமாறு..

தமிழ் கூறும் நல் உலகில் ஆகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. திராவிட இயக்கங்களில் லட்சியங்களை காப்பதற்கு உறுதி ஏற்று இருக்கிறோம். மதவாத சக்திகள் தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழகத்தை பேராபத்து சூழ்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழக முதலமைச்சருக்கு தமிழக மக்கள் கரம் கோர்க்க வேண்டும் வலு சேர்க்க வேண்டும்.

மதிமுகவில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலைமைகளுக்கு நான் காரணம் அல்ல நாங்கள் காரணம் அல்ல. மாவட்ட செயலாளர் அவர்கள் பகுதி செயலாளர் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை என்பதால் தான் நாங்கள் இந்த ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

பிரதமரை சந்தித்து ரஷ்யாவில் இருக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என துரை வைகோ மனு அளித்துள்ளார் அந்த மனுவில் 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டதாக கூறுகிறார் எத்தனை இந்தியா கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்…

பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். எதிரணியில் இருக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியதில் இருந்து துரை வைகோவின் முகத்திரை கிழிந்துள்ளது.

பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக தமிழகத்தில் திராவிட இயக்கத்தில் இருக்கிறீர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. அயலக துறை இருக்கிறது. ஆனால் ஓடோடி பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன..

இன்றைக்கு கலைஞர் நினைவிடத்தில் வைகோ ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வந்தது ஏழு ஆண்டுகள் உருண்டோடி உள்ளன அப்போதெல்லாம் வராமல் இப்போது வருவது என்பது வரவேற்கத்தக்கது இருந்த போதிலும் இதனை தேர்தலுக்காக மட்டும் செய்யாமல் ஆண்டுதோறும் கடைபிடிக்க வேண்டும்.

மதிமுக வைகோ கட்டுப்பாட்டில் இல்லை இருந்திருந்தால் மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version