Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»”ஈன பயலுங்க..யாருடா நீங்க” – முதல் மேடை பேச்சு இப்படியா இருக்கனும் கேப்டன் சன்!
    அரசியல்

    ”ஈன பயலுங்க..யாருடா நீங்க” – முதல் மேடை பேச்சு இப்படியா இருக்கனும் கேப்டன் சன்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    a1290
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூரில் நடந்த தேமுதிக மாநாடு 2.0 வில் பேசிய விஜயபிரபாகரன், வார்த்தைக்கு வார்த்தை தனது தாய் பிரேமலதா விஜயகாந்தை புகழ்ந்து பேசினார்.

    தொண்டர்களை பார்த்து பொங்கல் வாழ்த்துகளுடன் உரையை தொடங்கிய விஜயபிரபாகரன், தொண்டர்களின் மனம் அறிந்த ஒரே தலைவர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் என்றார். பின்னர் நானும் அரசியல்வாதி தான் சொல்ற அளவுக்கு பேச்சில் ஹைப் ஏற்றினார். எந்த கட்சியாவது தைரியமாக இந்து, இஸ்லாம், கிறிஸ்துவர்களுக்கு இப்படி முகப்பு அமைத்து மாநாட்டை நடத்த முடியுமா? நமக்கு சாதி இருக்கா? மதம் இருக்கா? என கேள்வி எழுப்பியவர், அவரே பதிலளிக்கும் விதமாக கேப்டன் என்ற ஒரு சொல்லில் தான் அனைத்து மதமும், கொள்கையும் இருக்கு என்றார்.

    தேமுதிகவுக்கு இத்தனை சதவீத ஓட்டுதான் இருக்கு என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறோம், இந்த மாநாட்டை பாருங்கள்.. ஒவ்வொரு தொண்டர்களும் அவர்களே சாப்பாட்டை எடுத்து கொண்டு வந்து இங்கே எங்களுக்காக திரண்டு இருக்கிறார்கள். எத்தனையோ வேலைகளை தூக்கி போட்டுவிட்டு எங்களுடன் மனித உரிமையை மீட்க தமிழ்நாட்டு மக்கள் உரிமையை மீட்க வந்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்ற சொன்ன ஒரே தலைவர் கேப்டன். அவருக்கு பின்னால் அவரது பணியை பிரேமலதா விஜயகாந்த் செய்து வருகிறார். ஒரு தொண்டராக அவருடன் நான் இருக்கிறேன்.

    தேமுதிக பேரம் பேசுது, பேரம் பேசுது என்று சொல்கிறார்களே.. தேமுதிக என்ன பேரம் பேச்சுன்னு சொல்ல முடியுமா.. ஓபன் சேலஞ்ச் பண்றேன், 2005க்கு முன்னாடி கேப்டனுக்கு என்ன சொத்து இருந்தது, இப்போ கேப்டன் குடும்பத்துக்கு என்ன சொத்து இருக்கு என்று ஓபனா சேலஞ்ச் பண்றேன். தயாரா?

    கண்ட கண்ட ஈன பயலுங்க பேரம் பேரம் பொட்டி பொட்டி என்று சொல்றீங்களே, யாருடா நீங்களா? இலவசமா கல்லூரி கட்டினார். அந்த கல்லூரி இருக்கிறதா? கேப்டன் டிவி ஆரம்பித்தாரு, அது இருக்கா? எங்களுக்கு எதுவும் இல்லை என்றாலும் நீங்க இருக்கிறீர்கள்.. அதுபோதும் எங்களுக்கு.

    ஓபனா சேலஞ்ச் பண்றோம். அதே சாலிகிராமத்துல அதே வீட்டில் தான் நாங்க இருக்கிறோம்.  கேப்டனின் கொடுக்கும் குணத்தால எங்களுக்கு இவ்வளவு இழப்பு என்று என்னைக்காவது நாங்க வருத்தப்பட்டு இருக்கிறோமா..? நாங்க கேப்டன் ரத்தம் எதுக்கும் பயப்பட மாட்டோம்” என முழுநேர அரசியல்வாதியாக மாறி பேசியுள்ளார்.

    2026 Election ADMK cuddalore dmdk DMK தேமுதிக மாநாடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிரம்ப் மகனுக்கு டென்மார்க் இளவரசியுடன் திருமணம்?. வரதட்சணையாக கிரீன்லாந்து!. வைரல் பதிவு!
    Next Article ஜனநாயகன் சர்ச்சை!. தணிக்கை வாரியத்தை பயன்படுத்தும் மத்திய அரசு!. கருணாஸ் விளாசல்!
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.