சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக சமூக விரோதியாக மட்டுமில்லாமல் துரோகியாக செயல்பட்டுக் வருவதாக அன்புமணி விமர்சித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை ஒட்டி பாமக தலைவர் அன்புமணி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் முதலமைச்சர் மிகப்பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு செய்து கொண்டிருப்பதாக விமரிச்த்துள்ளார். அவர் பேசும்போது, வன்னியர்கள் திமுகவிற்கு கொடி பிடிக்க வேண்டும், அவர்களுடைய வாக்குகள் மட்டும் திமுகவிற்கு வேண்டும் ஆனால் இட ஒதுக்கீடு அளிக்க மாட்டேன் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும். பலமுறை முதலமைச்சரை சந்தித்து நானும் ஐயாவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நேரடியாக கோரிக்கை வைத்தோம்.  சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். அதிகாரிகளையும், அமைச்சர்களையும் நூற்றுக்கணக்கான முறை சந்தித்து பேசியுள்ளோம். பலமுறை வலியுறுத்தியும் தற்போது வரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை, திமுக சமூகவிரோதி மட்டுமல்ல துரோகி.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். கர்நாடகாவில் 2வது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா, பீகார் போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டார்கள். ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

ஆனால், தமிழக முதலமைச்சர் மட்டும் அதில் துளி கூட அக்கறை இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே யாருக்கு அதிகமாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது யாருக்கு குறைவாக இருக்கிறதோ அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முடியும் அப்பொழுதுதான் உண்மையான சமூக நீதி கிடைக்கும். உடனடியாக சாதி மாறி கணக்கெடுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்த வேண்டும், இல்லை என்றால் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version