ஸ்ரீவில்லிபுத்தூர் கூமாப்பட்டி பிரபலம் தங்கபாண்டிக்கு பேருந்து விபத்தில் எலும்பு முறைவு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த ஒரு வீடியோவால் பிரபலமானார். கூமாப்பட்டியை புகழ்ந்து பேசிய தங்கப்பாண்டி ஷோஷியல் மீடியாவில் பிரபலமானதால், அவருக்கு சமூக வலைதளங்களில் பேச வாய்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி படபிடிப்பை முடித்துவிட்டு தன் சொந்த தங்கப்பாண்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணன் கோவில் அருகில் இயற்கை உபாதைக்காக பேருந்தில் இருந்து தங்கப்பாண்டி இறங்கிய போது, பேருந்து கதவு தட்டியதில் பேருந்தினுள் விழுந்து இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பேருந்தை ஓட்டி வந்த முருகேசன் என்ற ஓட்டுநரிடம் தங்கபாண்டியன் வலி தாங்க முடியவில்லை எனக் கூறியதற்கு உன்னை பார்த்தால் வடக்கன் போல் இருப்பதாக கூறியதாகவும் தன்னிடம் கடினமாக நடந்து கொண்டதாகவும் தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த தனியார் பேருந்து உழவர்சந்தை அருகே தங்க பாண்டியனை இறக்கிவிட்டு சென்றதாகவும், அதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கபாண்டியனிடம் ஓட்டுநர் கடினமாக நடந்து கொண்டாரா? இல்லையா? என்பதற்கான ஆதாரங்களை பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து முடிவெடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.