திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜுலை 21 முதல் ஜுலை 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதன் இரண்டாவது அமர்வு ஆகஸ்ட் ஒன்று முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். இடையில் ஆகஸ்ட் 12 முதல் 18-ந் தேதி வரை கூட்டத்தொடருக்கு விடுமுறை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள், விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் விவாதிப்பதற்காக திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் வருகிற திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எம்.பி.க்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version