அவிநாசியில் ரிதன்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது விரைவான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்த திரைப்பட நடிகை அம்பிகா உருக்கமாக கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்பிகா, விலங்குகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனிதர்களின் உயிர்களுக்கு இருப்பதில்லை என்றார்.
நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வருத்தமளிப்பதாகவே உள்ளது. ரிதன்யாவின் தற்கொலையில் 11 நாட்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தாமதமாகும். மற்ற நாடுகளில் உள்ளது போல நமது நாட்டிலும் தண்டனைகள் கடுமையானால்தான் இதுபோன்ற தற்கொலை மரணங்கள் குறையும்.
நடிகைதானே வந்து பேசுகிறார் என நினைக்காமல் ரிதன்யாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என அம்பிகா கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்தார்.