புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, திமுக, தவெக, நாதக போன்ற அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுகவிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் அடிக்கடி பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் அதிருப்தி அடைந்தவர்கள் கட்சியை விட்டு விலகி வருவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி தொண்டைமான் இன்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். 2012 ல் புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் கார்த்தி தொண்டைமான். அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்திருப்பது கட்சியினரையே அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

கடந்த ஜூலை 21-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில், தற்போது முன்னாள் எம்.எல்.ஏவும் திமுகவில் இணைந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version