கரூர் பெருந்துயரம் தொடர்பாக டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் 2வது முறையாக சிபிஐ நடத்திய விசாரணை நிறைவுப்பெற்றது.

கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக பிரச்சாரத்தில் நடந்த துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி முடித்த சிபிஐ அடுத்ததாக தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி வைத்தது.

அதன்படி, கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவகத்தில் ஆஜரான விஜயிடம் கரூரில் நடந்தது தொடர்பாக சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு இன்று மீண்டும் விசாரணைகு விஜய் ஆஜரானார்.

அவரிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது தொடர்ந்து பிரச்சாரம் செய்தது ஏன்? எப்போது பேச்சை முடித்தீர்கள், பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு ஏன் தாமதமாக போனீர்கள்? அனுமதிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிகமானோர் வந்தது எப்படி? தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசியபோது பார்க்கவில்லையா? வாகனத்தின் மேலே நின்றபோது கீழே நடந்ததை பார்க்கவில்லையா?

அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது. 2வது முறையாக ஆஜரான விஜயிடம் சுமார் 5 மணி நேரம் வரை நடைபெற்ற சிபிஐ விசாராணை நிறைவு பெற்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version