Close Menu
    What's Hot

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? – முதலமைச்சருடன் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை
    அரசியல்

    காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? – முதலமைச்சருடன் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kcv and stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதலாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரை திமுக பேச்சுவார்த்தைக் குழு  அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.யூ.எம்.எல்.  தேசியத் தலைவர் காதர் மொய்தீன், தாங்கள் 5 சீட்டு கேட்டதாகவும், திமுக 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    23ஆம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி ,  மதிமுக , மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுடனும், 26 ஆம் தேதி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  27 ஆம் தேதி – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி,  காங்கிரஸ் ஸ்கிரீனிங் கமிட்டி தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வருமான டி.எஸ். சிங் தியோ ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இரவு 8.55 மணிக்கு சந்தித்து  தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேசினர்.

    45 நிமிடங்கள் வரை நீட்டித்த இந்த சந்திப்பின்போதும், சுமார் 10 நிமிடங்கள் முதலமைச்சர், கே.சி.வேணுகோபால், கனிமொழி ஆகிய மூன்று பேர் மட்டும் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    கடந்த 17 ஆம் தேதி கே.சி வேணுகோபால் சென்னை வந்திருந்தபோது காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இப்போது நடைபெற்ற சந்திப்பில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை
    Next Article வேலூரில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்!. 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி!.
    Editor TN Talks

    Related Posts

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    April 21, 2026

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    April 21, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    Trending Posts

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.