Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“தமிழகத்தில் வெற்றிக்கு முன்னோட்டம்” – செல்வப்பெருந்தகை உற்சாகம்
    அரசியல்

    “தமிழகத்தில் வெற்றிக்கு முன்னோட்டம்” – செல்வப்பெருந்தகை உற்சாகம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025Updated:December 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைக்கவுள்ள வெற்றிக்கு முன்னோட்டம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

    4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. கேரளாவில் 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

    கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.

    தமிழகத்தில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 2.09 கோடி (45.3 சதவீதம்) வாக்குகளை திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி பெற்று தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.

    இண்டியா கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை சேர முன்வரவில்லை. பாமக உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அதிமுகவிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது.

    தமிழகத்தில் 2026 தேர்தலில் இண்டியா கூட்டணி மீண்டும் உறுதியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு ஊக்கம் தரும் வகையில் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபாரவெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
    Next Article “இப்போ இல்லன்னா, எப்பவுமே இல்லை” – சொல்கிறார் ஹெச்.ராஜா
    Editor TN Talks

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.