வாக்குத்திருட்டு செய்ததற்கான நூறு சதவீத ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராகுல்காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். அதை தொடர்ந்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், வாக்கு திருட்டில் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது. இளைஞர்கள் தேர்தல்களில் எவ்வாறு மோசடிகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை நிரூபிப்பதில் இது ஒரு மைல்கல். ஜனநாயகத்தை சீர்குலைப்பவரை தேர்தல் ஆணையம் காப்பாற்ற முயற்சிக்கிறது.

தேர்தல்களின் போது லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க யாரோ ஒருவர் முயற்சிக்கிரார். கர்நாடக மாநிலத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஆலந்தில் 6018 வாக்குகள் நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிப்பட்டார்.

இப்படி தேர்தலின்போது வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையில் யாரோ ஒருவருக்காக சில சக்திகள் செயல்படுகின்றன. வாக்குத்திருட்டு தொடர்பான இந்த குற்றச்சாட்டுகளுக்கு 100 சதவீத ஆதாரம் உள்ளது. என்னுடைய புகார்கள் அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் இருக்கும். கர்நாடகாவில் போலி லாக் – இன் முகவரியை பயன்படுத்தி வாக்குகள் திருடப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியாக இருக்கும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், ஓபிசிக்கள் தான் அதிகம் குறிவைக்கப்படுகின்றன. இதனை நாங்கள் பலமுறை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது தான் 100 சதவீத ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளோம்” என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version