கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் திமுகவுக்கு 10% வாக்கு வங்கி கூட கிடையாது என்று அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா விஸ்வநாதன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் அதிமுக கட்சி அலுவலகத்தில் பூத்து கமிட்டி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளரான நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமையும். கூட்டணி ஆட்சி என்பது கிடையாது.அமித் ஷா சொல்லும் பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் யாரும் மகிழ்ச்சியுடன் இல்லை. திருமாவளவனின் சக்தி திருமாவளவனுக்கே தெரியவில்ல. திமுகவை விட ஓட்டு வங்கி அதிகம் உள்ள கட்சி திருமாவளவன் கட்சி தான். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் இல்லாவிட்டால் திமுகவுக்கு ஓட்டு சதவீதம் என்பதே கிடையாது திருமாவளவன் உள்ளிட்ட நபர்கள் தான் திமுகவை காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டால் திமுகவுக்கு 10 சதவீத வாக்கு வங்கி கூட இல்லை என்றார்.

தமிழகத்தில் வரும் 2026ம் ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான கூட்டணி சிறப்பாக வெற்றி பெறும் மக்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக உள்ளனர் மக்களுக்காக திமுக அரசு எந்த ஒரு செயலும் செய்யவில்லை என கூறினார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அதிக அளவு மரணங்கள் நடைபெற்று வருகிறது. காவல்துறையை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கை பற்றி எதையும் கவலைப்படுவது கிடையாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றும் அவருக்குத் தெரியாது.

போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கொக்கைன். கஞ்சா, போலி மதுபான விற்பனை என தொடர்ந்து போதைமயமாக்கல் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் போதை விற்பனை நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் பிரச்சனை, பொது பிரச்சனைகள் திமுக கவனம் செலுத்துவது இல்லை. பணம் வைத்து மட்டும் வெற்றி பெற முடியாது. பணத்தை வைத்து ஆட்சிக்கு வரலாம் என்பது பகல் கனவு என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version