கர்நாடகம்,மராட்டியத்தை போல் தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், மகாதேவ்புரா நாடாளுமன்ற தொகுதியில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் முன்னணி என தேர்தல் ஆணையம் சொன்னதை ஆராய்ந்து தான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்ததை வெளிக்கொண்டுவந்தார்.
மகாதேவ்புரா தொகுதியில் பலருக்கு ஓர் எழுத்தில் பெயர் இருந்தது. பலருக்கு கதவு எண் 0 என குறுப்பிடப்பட்டுள்ளது. ஓரு வீட்டில் 120 பேர் வாக்கு உரிமை பெற்றுள்ளனர். இதனை எல்லாம் அம்பலபடுத்திய பின்னரும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதியை இழந்தது. போலியான முகவரியை சேர்ப்பது,போலியான நபர்களை சேர்ப்பது போன்ற வகையில் வாக்கு திருட்டு நடத்தப்பட்டது. அவர்கள் பேரில் கட்சியினர் வாக்களித்து தேர்தல் நடந்தது. அதேபோல் குல்பர்கா எம்பி தொகுதியில் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் 10 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் எம்.எல்.ஏ வெற்றி பெற்றார். ஆனால் அதே தொகுதியில் 12 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் எம்.பி தோல்வி அடைகிறார்.இப்படி பல மோசடிகள் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற தகவல்கள் இயற்கைகைக்கு எதிரானதாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் நூற்றுகணக்கான நபர்கள் குடிபெயர்ந்து விட்டனர்,காணாமல் போய்விட்டனர், மறைந்துவிட்டனர் என தேர்தல் ஆணையம் இயற்கைக்கு மாறான திள்ளுமுள்ளு செய்துள்ளது. வாக்கு திருட்டு மகாராஷ்டிரா கர்னாடக போன்ற மாநிலங்களில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கலாம். தமிழகத்தில் சதியை பின்னக்கூடிய பாரதிய ஜனதா கட்சி உள்ளது.தமிழகத்தில் அதனை நடக்க விடமாட்டோம் அதே போல் கேரளாவிலும் நடக்காது. நாம் தான் வலிமையான அணி அதற்கு எதிரான அணி பலவீனமான அணி என சொல்ல கூடாது. திமுக தமிழகத்தில் வலிமையான அணி அதிமுக வலிமையை குறைத்து மதிப்பிட மாட்டேன் எனபேசினார்.
மேலும், அதிமுக வலிமையை குறிப்பிட்டு திருக்குறளை மேற்கோள் காட்டிய சிதம்பரம், தமிழகத்தில் கட்டுகோப்பான அணிகள் உள்ளது என்றும், தமிழகத்தில் திமுக அணி, அதிமுக அணி என இரண்டு அணிகள் இருந்தால் வாக்கு வாக்கு திருட்டு நடக்காது, ஆனால் தற்போது அதிமுக அணியில் பாஜக புகுந்து உள்ளது. ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது என தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. அதே போல் பாஜக புகுந்த வீடு உருப்படாது. அவர்களது கூட்டணி உருப்படாது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வாக்கு திருட்டு நடப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. மே மாதம் வரை தமிழகத்தில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் தவறான ஒருவரை கூட நீக்கவும் சேர்க்கவும் அனுமதிக்க கூடாது மகாராஷ்டிரா கர்நாடகாவில் நடந்ததை போல் தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பு உருவாக்கிவிடும்.
.வாக்கு திருட்டுக்கான காரணம் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் கூட்டணி P. Chidambaram warns of potential vote theft வைத்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. டி.எம். சேஷன் இருந்த தேர்தல் ஆணையம் தற்போது கோமாளிகளால் நடத்தப்படுகிறது. இன்னும் 8 மாதங்கள் விழிப்புடன் இருந்து வாக்குத்திருட்டை தடுத்து தமிழகத்தில் நியாயமான தேர்தலை நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என விமர்சித்து பேசினார்.