பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய பொன்முடியின் முழு வீடியோவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
திமுக முன்னாள் அமைச்சரான பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பெண்கள் குறித்தும், சைவம், வைணவம் குறித்தும் சர்ச்சை கருத்துகளை கூறினார். இதனால் அவருக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து பொன்முடியின் சர்ச்சை கருத்து தொடர்பாக தாமாக வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை மேற்கொண்டது.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பொன்முடிக்கு எதிரான புகார்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை முடித்து விட்டதாக தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி புகாரில் முகாந்திரம் ஈல்லை என கூறி வழக்கை எப்படி போலீசார் முடிவுக்கு கொண்டு வந்தனர் என கேள்விஎழுப்பினார்.
அப்போது மீண்டும் பேசிய தலைமை வழக்கறிஞர், “ பொன்முடி பேசிய கருத்துகள் அவருடைய கருத்துகள் இல்லை. அது 1972ம் ஆண்டு பேசிய சமூக சீர்த்திருத்தவாதிகளின் கருத்துகளையே பொன்முடி பேசியதாக தெரிவித்தார். அதை கேட்ட நீதிபதி, சர்ச்சை விவகாரத்தில் பொன்முடி பேசிய முழு வீடியோவும், அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டதை போல் 1972ம் ஆண்டு சமூக சீர்த்திருத்தவாதிகள் பேசியதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனால் பொன்முடி பேசிய முழு வீடியோவையும் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.