அரசு மருத்துவமனைகளில் ஆய்வு என்னும் பெயரில் PR Stunt நடத்திக் கொண்டிருக்கும் தவெகவினரை அடக்கி வையுங்கள் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் PR Stunt நடத்திக் கொண்டிருக்கிறது த.வெ.க.
மருத்துவ அணி என்ற பெயரில் தங்கள் கருப்பு Coat தலைவர் போலவே வெள்ளை Coat-ஐ மாட்டிக் கொண்டு ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு எல்லாம் சென்று அரசு மருத்துவர்களை, செவிலியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டி வருகிறது இந்த ரசிக வெறி கும்பல் என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கனவே முந்தைய திமுக அரசால் நிறைய மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், கடுமையாக Stress-க்கு ஆளாகியுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை, உங்கள் ரீல்ஸ் Content-காக மேலும் Disturb செய்வது எப்படிப்பட்ட Sick Mindset?

அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்த வேண்டும் என்றால், அதை துறை அமைச்சர் செய்யட்டும்; துறை அதிகாரிகளோடு இணைந்து சட்டமன்ற உறுப்பினர் செய்யட்டும்.

அதை விடுத்து, சினிமா படம் போல டாக்டர் வேஷம் போட்டுக்கொண்டு, மருத்துவ அணி எனக் கூறிக் கொண்டு, மருத்துவப் பணிக்கு இடையூறாக, நோயாளிகளை Endanger செய்யும் தவெகவினரை அடக்கி வைக்கவும்,
மருத்துவப் பணியாளர்களை அவர்களின் பணியை செய்ய விடவேண்டும் எனவும் முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version