தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரசாத் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சிகள் தேர்தல் வேலையை தீவிரப்படுத்தி இவருகின்றனர். ஜன் சுராஜ் கட்சியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் சட்ட மன்ற தேர்தலுக்கான வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தவெகவின் ஆலோசகராக தொடர்வது குறித்து நவம்பர் 30க்கு பிறகு முடிவு செய்யப்படும் எனவும் பிரசாத் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவரின் simple sense analytics நிறுவனத்தை சேர்ந்த 30 ஊழியர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கள பணிகளுக்கு பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் அந்த பணியில் இருந்து வெளியேறி இருந்தனர். ஆதவ் அர்ஜுனின் ’வாய்ஸ் ஆப் கமான்’ மற்றும் ஜான் ஆரோக்கிய ராஜின் தனியார் நிறுவனமும் தற்போது தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.
