என் மூச்சுக்காற்று அடங்கும்வரை அன்புமணிக்கு தலைவர் பதவி கிடையாது என்று பாமக தலைவர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நாள்தோறும் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ் இன்றும் அந்த சந்திப்பினை நடத்தினார். அவர் பேசும்போது, 2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன். குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியதை காப்பாற்ற முடியவில்லை.

பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, தாயை மதிக்கணும் எனச் சொன்னாலே அன்புமணிக்கு கோவம் வருகிறது. தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்.

மாநாட்டிற்குப் பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மோசமாகி விட்டது. அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மனஉளைச்சலை உண்டாக்குகிறார் அன்புமணி. தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராத அளவுக்கு படுத்துகிறார் அன்புமணி.

பாட்டாளி சொந்தங்களே என்றால் பூரிப்பு ஏற்படுகிறது. 2026 தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்குத் தலைவர் பதவியை தருகிறேன் என நேற்று சொன்னதற்கு 99 சதவீத பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த 1 சதவீதம் அன்புமணியின் குடும்பத்திற்காக விட்டுவிடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version