தன்னை கட்சியில் சேரும்படி, திமுக அணுகவில்லை என்று தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவெகவில் சேர்ந்தபிறகு பனையூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் திமுக அமைச்சர் சேகர்பாபு நேற்று சந்தித்து பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த வருமாறு:
நான் சபாநாயகர் அப்பாவுவை மட்டுமே சந்தித்தேன். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாகவே அவரை சந்தித்தேன்.
அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்கவில்லை. அவரை சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை காட்ட முடியுமா? அதுதொடர்பான தகவலில் உண்மையில்லை. நான் அடிக்கடி கட்சி மாறும் நபர் கிடையாது. 50 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருந்துள்ளேன்.
இதேபோல், திமுக, பாஜக ஆகியவை தூது விட்டதாக வரும் தகவலிலும் உண்மை கிடையாது.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்,
