Close Menu
    What's Hot

    ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு..!! சுத்தமாகும் வகுப்பறைகள்.. பணிகள் தீவிரம்..!!

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»‘என்னை நம்பி வாங்க..’ – அதிமுக மாஜிக்களுக்கு செங்கோட்டையன் வலை
    அரசியல்

    ‘என்னை நம்பி வாங்க..’ – அதிமுக மாஜிக்களுக்கு செங்கோட்டையன் வலை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025Updated:December 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengottaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அ​தி​முக​வில் இருந்து தவெக​வுக்கு சென்ற முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கட்​சி​யின் நிர்​வாக குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் மற்​றும் ஈரோடு, கோவை, நீல​கிரி, திருப்​பூர் ஆகிய 4 மாவட்​டங்​களின் அமைப்பு செய​லா​ளர் பொறுப்பு வகித்து வரு​கி​றார். அவர் அதி​முக​வில் அதிருப்​தி​யில் உள்ள முன்​னாள் எம்​எல்​ஏக்​களை இழுக்​கும் முயற்​சி​யில் தீவிர​மாக களம் இறங்​கி​யுள்​ளார்.

    குறிப்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் கோட்​டை​யாக கருதப்​படும் சேலம், நாமக்​கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய கொங்கு மண்​டலத்​தைச் சேர்ந்த அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏக்​களுக்கு செங்​கோட்​டையன் நேரடி​யாக ஃபோனில் தொடர்​பு​கொண்டு பேசி வரு​கி​றார்.

    இதுகுறித்து அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் கூறுகை​யில், “அதி​முக​வில் பழனி​சாமி​யால் ஓரங்​கட்​டப்​பட்ட மற்​றும் அவரின் தலை​மையை ஏற்க விரும்​பாத முன்​னாள், இந்​நாள் எம்​எல்​ஏக்​கள், மாவட்ட, நகர நிர்​வாகி​கள் பலர் உள்​ளனர். இந்த அதிருப்​தி​யாளர்​களுக்கு வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட நிச்​ச​யம் வாய்ப்பு வழங்​கப்​ப​டாது.

    அவ்​வாறு ஓரம் கட்​டப்​பட்ட முன்​னாள், இந்​நாள் எம்​எல்​ஏக்​கள் மற்​றும் கட்சி நிர்​வாகி​களை செங்​கோட்​டையன் நேரடி​யாக செல்​போனில் அழைத்​துப் பேசுகி​றார். அவரிடம் தேர்​தல் செல​வுக்கு பணம் எது​வும் இல்லை என்று கூறி​னாலும் ‘என்னை நம்பி வாங்க’ என தெரிவிக்​கி​றார்.

    அவரது வார்த்​தையை நம்பி கடந்த சில தினங்​களுக்கு முன் சேலம் மாவட்​டம் ஓமலூரைச் சேர்ந்த முன்​னாள் அதி​முக எம்​எல்​ஏ​வும், சேலம் புறநகர் மாவட்ட எம்​ஜிஆர் மன்ற செய​லா​ள​ரு​மான பல்​பாக்கி கிருஷ்ணன், செங்​கோட்​டையன் முன்​னிலை​யில் தவெக​வில் இணைந்​துள்​ளார். இது​போல் பலருக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்​கப்​பட்டு வரு​கிறது.

    யார் யார் எல்​லாம் தவெக​வுக்கு தாவ உள்​ளனர் என்​பது வரும் நாட்​களில் தெரிய​வ​ரும். திமுக உள்​ளிட்ட பிற கட்​சி​யினரை செங்​கோட்​டையன் தொடர்பு கொள்​வது கிடை​யாது. செங்​கோட்​டையனை வைத்து அதி​முகவை, பாஜக பலவீனப்​படுத்தி வரு​கிறது. இதை பழனி​சாமி​யும் நன்கு அறி​வார். ஆனால் மயான அமைதி காத்து வரு​கிறார் என்​றார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரயில்ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி
    Next Article சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
    Editor TN Talks

    Related Posts

    ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு..!! சுத்தமாகும் வகுப்பறைகள்.. பணிகள் தீவிரம்..!!

    June 2, 2026

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    June 2, 2026

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு..!! சுத்தமாகும் வகுப்பறைகள்.. பணிகள் தீவிரம்..!!

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.