ஈரோட்டில் இரண்டு மணி நேரம் மட்டுமே தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே 18ஆம் தேதி விஜய்யின் பிரச்சாரம் நடைபெற உள்ள நிலையில், ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிபந்தனைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.
பிரச்சாரம் நடைபெற உள்ள இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், தவெகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்றும், யாருடன் கூட்டணி என்பதை கட்சி தலைவர் விஜய் முடிவு செய்வார் எனவும் செங்கோட்டையன் கூறினார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்தார்.
பிரச்சாரத்தில் யாரேனும் கட்சியில் இணைவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொறுத்து இருந்து பாருங்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தவெகவில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ அப்படி தான் தவெகவில் இருக்கிறேன் என்று கூறினார்.
