“எம்ஜிஆர் வழியில் விஜய் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்” என தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்​கோட்​டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அவர் கூறியதாவது:

மக்கள் சக்தியுடன் 2026-ல் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமரும் வாய்ப்பு உருவாகலாம். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ விஜய்க்கு உதவுவேன்.

அதிமுகவில் இருந்து மேலும் சிலர் வருவது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. சொன்னால் பிரச்சினை வரும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “எம்ஜிஆர் இயக்கத்தை துவங்குகிறபோது, இது திரைப்படத்தைப் போல நூறு நாட்கள் தான் ஓடும் என சொன்னார்கள். ஆனால் அவருடைய ஆட்சியை இறுதிவரை யாராலும் வெல்ல முடியவில்லை. வரலாறு படைத்த ஒரு தலைவர்.

எம்ஜிஆர் வழியில் விஜய் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் திருவுருவம் தாங்கிய வாகனத்தில் தான் விஜய் சென்று கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் எவ்வழியில் பயணம் செய்தாரோ, அதேவழியில் இவரும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version