திருச்சியில் விஜய் நடத்திய பிரச்சாரத்திற்கு அதிகளவில் மக்கள் கூடியதை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

திருச்சி மரக்கடையில் நடந்த முதல் பிரச்சார கூட்டத்தில் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் விஜய் திணறினார். இது குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், விஜய்யின் பிரச்சாரத்தில் பெரிய அளாவில் கூட்டம் திரண்டது உண்மை தான். ஒரு நடிகருக்கு இந்த அளவுக்கு கூட்டம் கூடுவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், இவ்வளவு கூட்டம் வரும் என தெரிந்து பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவையாக இருந்திருக்க வேண்டும்.

மக்கள் மனம் நோகாதபடியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதப்படியும் கூட்டத்தை போலீசார் ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆளும் கட்சிக்கு போலீஸ் கொடுக்கும் பாதுகாப்பை மற்ற கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும். விஜய்யின் திமுக எதிர்ப்பு ஆரோக்கியமானது. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

விஜய் நடிகர் என்பதால் அவரை பார்க்க கூட்டம் கூடுவது வழக்கம். விஜய்யை பார்க்க வரும் கூட்டம் ஒட்டு மொத்தமாக ஓட்டாகி விடுமா என்பது தெரியாது. ஆனால், இந்த கூட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்பதில் விஜய் அக்கறை காட்ட வேண்டும் என கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version