Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது!- முதல்வர் பினராயி விஜயன்
    அரசியல்

    தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது!- முதல்வர் பினராயி விஜயன்

    Editor web1By Editor web1December 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    KL2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாகவும், வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச. 13) நடைபெற்றன. இதில், ஆளும் இடதுசாரிகள் கூட்டணி (LDF) பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி (UDF) அதிக இடங்களை வென்றுள்ளது. மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி (NDA) கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

    ஆளும் இடதுசாரி கூட்டணியின் தோல்வி குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் எதிர்பார்த்த பெருவெற்றியை அடைய முடியாததற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி விரிவாக ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார். தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் முன்னேறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

    வகுப்புவாத சக்திகளின் தவறான தகவல்கள் மற்றும் பிளவுபடுத்தும் தந்திரங்களுக்கு மக்கள் பலியாகிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக விழிப்புணர்வு தேவை என்பதற்கான எச்சரிக்கை மணியாக தேர்தல் முடிவுகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஆதரவை மேலும் வளப்படுத்தவும், அதன் அடிப்படையை பலப்படுத்தவும் உறுதியுடன் செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெஸ்ஸி நிகழ்வில் கலவரம்!. வருத்தத்துடன் பகிரங்க மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி!.
    Next Article ஐதராபாத்தில் முதல்வர் ரேவந்த்- மெஸ்ஸி சந்திப்பு!- உற்சாக வரவேற்பு
    Editor web1
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.