மக்களை சந்திக்கும் விஜய் பிரச்சாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மாநாட்டை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட மக்களையும் நேரடியாக சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் 13ம் தேதி தொடங்கிய விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திருச்சி, நாகை மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை முடித்துள்ளார். அடுத்ததாக, நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு செல்லும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த சூழலில் டிசம்பர் மாதத்துடன் முடிய உள்ள விஜய்யின் சுற்றுப்பயணம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணத்தின் போது அதிகளவில் மக்கள் கூட்டம் வருவதால் உரிய நேரத்தில் பேச முடியாமல் போவது, போக்குவரத்து நெரிசல், மக்களின் பாதுகாப்பு நடவடிக்கை என பல பிர்ச்சனைகள் எழுவதால், ஒரே நாளில் இரண்டு மாவட்டத்திற்கு பதிலாக 3 மாவட்ட மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சென்னையில் விஜய்யின் பிரச்சாரம் எப்பொழுது என்ற கேள்விக்கு அவர் அக்டோபர் 21ம் தேதி சென்னை மக்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் திமுகவை விமர்சித்து வரும் விஜய்க்கு திமுக தலைமையும், அமைச்சர்களும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version