Close Menu
    What's Hot

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டும் திருந்தவில்லை – உதயநிதியைச் சாடியுள்ள வானதி சீனிவாசன்
    அரசியல்

    ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டும் திருந்தவில்லை – உதயநிதியைச் சாடியுள்ள வானதி சீனிவாசன்

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 vanathi srinivasan uthaya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கடிந்துரைத்துள்ளார்.

     சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    சனாதன தர்மம் அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலினின், திமுகவின் கொள்கை என்றால், அதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? தேர்தல் பிரசாரத்தில் சனாதன தர்மத்தை இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை? என வினா எழுப்பியுள்ள வானதி சீனிவாசன்,

    தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளில், “நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆட்சியின் இறுதி மூச்சு வரை இந்து தர்மத்தை பழிப்பதை திமுக வழக்கமாகக் கொண்டிருந்தது. அதனால்தான், கடைசி நாளில், “நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல” என ஸ்டாலின் சொன்னதை மக்கள் நம்பவில்லை எனக் கூறியுள்ளார்.

    முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகள் இனி திமுகவுக்கு கிடைக்காது என்ற பேசப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லை என்றால்  அறிவாலயம்

     என்பது ஜீரோ தான். அதனால்தான், “நாங்கள் எப்போதும் இந்து விரோதி தான்” என்பதை, எதிர்க்கட்சித் தலைவரானதும் முதல் உரையிலேயே உதயநிதி பேசியுள்ளார்.

    தமிழக மக்கள் இந்த வேடதாரிகளை புரிந்து கொண்டுதான், ஆட்சியிலிருந்து விரட்டியடித்துள்ளனர். அப்படியும் இவர்கள் திருந்தவில்லை. அதனால் மக்கள் திருத்துவார்கள். அதற்கான காலம் விரைவில் வரும் என வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெகா டுவிஸ்ட்!. சி.வி.சண்முகம் – எஸ்.பி. வேலுமணியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!
    Next Article அடுத்த அதிரடி!. டாஸ்மாக் இயக்குநராக நந்தகுமார் நியமனம்!. ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
    Editor TN Talks

    Related Posts

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    July 1, 2026

    காலையிலேயே இன்ப அதிர்ச்சி..!! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு..!!

    July 1, 2026

    வேலைவாய்ப்பை அதிகரிக்கும் 125 நாள் திட்டம்..!! இன்று முதல் தமிழகத்தில் அமல்..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    16வது வருடாந்திர உச்சி மாநாடு..!! இன்று டெல்லி வருகிறார் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி..!!

    காலையிலேயே இன்ப அதிர்ச்சி..!! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.