Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»புதுப் புது அடிமைகளை தேடுகிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
    அரசியல்

    புதுப் புது அடிமைகளை தேடுகிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025Updated:December 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் நெருங்குவதால் புது புது அடிமைகளை பாஜகவினர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

    திமுக பகுத்தறிவு பாசறை அணி மாநில செயலாளர் திருவிடம் என்பவரது படத்திறப்பு நிகழ்ச்சி, திருவாரூர் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது:

    மறைந்த திருவிடம் மிகச் சிறந்த கொள்கை பற்றாளராக திகழ்ந்தவர். தனிமனித இயக்கமாக விளங்கியவர். அவரைப் போல லட்சக்கணக்கான தொண்டர்களை பெற்றது திமுக. இளைஞர் அணியினரும், கட்சியினரும் ஒவ்வொருவருமே தனி இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பீகார் தேர்தல் வெற்றிக்கு பின்னர் அடுத்தது தமிழ்நாடு என அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு திருவண்ணாமலையில் நான் பதில் அளித்தபோது ‘வி ஆர் ரெடி டு ஃபைட்’ என தெரிவித்தேன்.

    தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ளன. ஒவ்வொரு தொண்டர்களும் அரசின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால் ஏற்கனவே இருக்கின்ற அடிமைகள் போதாது என்று புது புது அடிமைகளை தேடிப்பிடித்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அவர்களுடனும் கூட்டணி வைத்து வருவார்கள். அவர்களையெல்லாம் தமிழக மக்களின் ஆதரவுடன் ஓட ஓட விரட்ட வேண்டும்.

    வரும் 2026 தேர்தல் என்பது சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் நடக்கின்ற தேர்தல். சமூக நீதிக்கும், அநீதிக்கும் நடக்கின்ற தேர்தல். மாநில உரிமைக்கும், டெல்லிக்கும் நடக்கின்ற தேர்தல் என்பதை உணர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். நிச்சயம் திமுக மற்றும் அதன் கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். ஏழாவது முறையாக திமுக ஆட்சியில் அமரவும், இரண்டாவது முறை முல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக அமரவும் இருக்கின்ற 100 நாட்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இருக்கும் 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற திமுகவினர் உழைக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”ஆரம்பத்தில் இருந்து எஸ்.ஐ.ஆருக்கு ஒரு மாதம் போதாது என்று முதல்வர் கூறியிருந்தார்‌. அதற்கான வழிமுறைகள் கூறி உள்ளார்கள். நாளை, நாளை மறுநாள் ஆன்லைன் பார்த்தால் தான் யார் யார் விடுபட்டு இருக்கிறார்கள்? என்பது தெரியும் அதற்கு பிறகும் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.

    முன்னதாக, கலைஞர் கூடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அப்போது குழந்தைகளுடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழிவாங்க தொடங்கிய அமெரிக்கா!. ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் மீது வான்வழி தாக்குதல்!.
    Next Article விஜய் அப்டேட் ஆகணும்!. மாணவர்கள் Dropout விவகாரத்தில் அன்பில் மகேஷ் பதிலடி!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.