Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»‘அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் பழனிசாமி…’ – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
    அரசியல்

    ‘அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் பழனிசாமி…’ – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025Updated:December 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் பழனிசாமி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணியை திமுக எதிர்க்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதரிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பழனிசாமியால் மூச்சு கூட விட முடியாது. ‘அதிமுக’ என்றால் ‘அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம்’ என நினைத்து கொள்ளக்கூடாது. இது ‘அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாறிவிட்டது. ‘அதிமுக’ என்பது ஒரு கட்சி அல்ல.

    பாஜகவின் கிளை அமைப்பாகும். அதிமுக தலைமை அலுவலகம், சென்னையில் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அதிமுக தலைமை அலுவலகமானது டெல்லியில் உள்ளது. பிரச்சினை என்றால் விமானத்தில் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகின்றனர். டெல்லியில் எடுக்கும் முடிவை, தமிழகத்தில் அதிமுக செயல்படுத்துகிறது.

    அமித்ஷாவை சந்தித்துவிட்டு, அவரிடம் அனுமதி பெற்றுவிட்டு வேறொரு இயக்கத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். முன்பெல்லாம் ரகசியமாக சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தவர்கள், இப்போது அமித்ஷாவை சந்திக்க போகிறோம் என சொல்லிவிட்டு செல்கின்றனர். இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து விட்டு வந்துள்ளார்.

    தமிழகத்துக்கு எதிராக, மத்திய பாஜக அரசு சொல்வதையே அதிமுக செய்கிறது. அமித் ஷாவுக்கு பழனிசாமி பயப்படுகிறார். அவர் அதிமுகவில் இருக்கிறாரா, பாஜகவில் இருக்கிறாரா அல்லது ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கிறாரா என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை. இன்னும் சொல்லபோனால் அதிமுகவே இல்லை என்றார்.

    திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி எம்எல்ஏ, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜேம்ஸ் கேமரூன் இயக்கிய திரைப்படங்களின் மொத்த வசூல் விபரம் தெரிந்தால் தலை சுற்றி போவீர்கள் !!!
    Next Article “தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
    Editor TN Talks

    Related Posts

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    July 18, 2026

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    July 18, 2026

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.