Close Menu
    What's Hot

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
    அரசியல்

    சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 ponmudi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

    சென்னையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

     

    இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனு,  எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில், மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என வாதிடப்பட்டது.

    புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், தனது பேச்சு ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்பு பேச்சை பேசியுள்ளார்; இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், பொன்முடியின் பேச்சால் பொது அமைதிக்கு எந்த குந்தக்கமும் ஏற்படவில்லை என கூறி, புகார்கள் முடித்துவைக்கப்பட்டன; தற்போது பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடர அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், அவர் வழக்கை எதிர்கொண்டு குற்றாகச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது
    Next Article காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்
    Editor TN Talks

    Related Posts

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    July 14, 2026

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    July 14, 2026

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.