பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் தான் சின்னத்தை ஒதுக்குகிறது. மேலும், 234 தொகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் போது தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்குகிறது.
அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தான் இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல் பொது சின்னம் கேட்டு விண்ணப்பிக்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பொதுவான சின்னம் கேட்டு, விண்ணப்பிக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளதாகவும், தவெகவுக்கு தனித்துவமாகவும், மக்கள் எளிதாக நினைவில் கொள்ளும் வகையிலும் சின்னத்தை பெறுவதில் கட்சியின் தலைவர் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
