நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் நேற்று நடைபெற்ற 39-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி பெங்களூருவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. வெறும் 75 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. தொடர்ந்து விளையாடிய நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி தனது ஆதிக்கத்தை நிரூபித்தது. இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஜாம்பவான் அணிகளின் சாதனைப் பட்டியலில் ஆர்.சி.பி இணைந்தது. டெல்லி அணிக்கு எதிராக ஆர்.சி.பி பெறும் 21-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் ‘எலைட்’ பட்டியலில் பெங்களூரு இடம் பெற்றுள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிராக 25 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆர்.சி.பி எதிர்கொள்கிறது. குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version