Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து விலகிய அக்ஸர் படேல்… புதுமுக வீரருக்கு வாய்ப்பு
    விளையாட்டு

    தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து விலகிய அக்ஸர் படேல்… புதுமுக வீரருக்கு வாய்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    axarr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் உடல்நலக் குறைவு காரணமாக விலகியுள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 17) லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும்.

    இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தொடரிலிருந்து விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல், உடல்நலக் குறைவு காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய அக்ஸர் படேல், மூன்றாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் தான் அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவர் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்ஸர் படேலுக்கு மாற்றாக ஷபாஸ் அஹ்மத் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணிகள்

    இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஷபாஸ் அஹ்மத்*, ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

    தென்னாப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ரம், ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், குயின்டன் டி காக், டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஜார்ஜ் லிண்டே, லூதோ சிபம்லா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!. பலத்த பாதுகாப்பு!
    Next Article தங்கம், வெள்ளியை விடுங்க.. இனி இந்த உலோகத்துக்குத்தான் மவுசு அதிகமாகப் போகுது..!! விலையும் தாறுமாறாக உயர்வு..!!
    Editor TN Talks

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    July 3, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    July 3, 2026

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.