ஃபுட்பால் விளையாட்டு துறையைப் பொறுத்தவரையில் மிகப் பிரபலமான வீரர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 40 வயது ஆன பொழுதிலும் ஒரு சிறு இளைஞர் போல சுறுசுறுப்பாக விளையாடும் அளவுக்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கெட்டிக்காரர் அவர்.
தற்பொழுது சவுதி அரேபியாவை சேர்ந்த அல் நாசர் என்கிற கிளப்புக்காக விளையாடி வருபவர் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பைசைக்கிள் கோல் அடித்து அத்தினார்.
https://x.com/AlNassrFC_EN/status/1992692109275771376?t=vzl99PE4MpHAgEtdf75nDg&s=19
ஃபுட்பால் மைதானத்தில் நேரம் பார்த்து கோல் அடிப்பதே மிகப்பெரிய விஷயம். அதிலும் குறிப்பாக இந்த ஸ்டைலில் ( கிட்டத்தட்ட பின்னால் டைவ் அடித்து தலைக்கு மேல் கால் உயர சென்று கோல் அடிப்பது ) கோல் அடிப்பது மிகவும் அசாத்தியனமான விஷயம்.
அப்படிப்பட்ட ஸ்டைலில் தான் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் கலீஜ் எஃப்சி கிளப்புக்கு எதிராக கோல் அடித்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 2018 ஆம் ஆண்டு அவர் ரியல் மேட்ரிட் கிளப்பில் விளையாடிய பொழுது ஜூவென்டூஸ் கிளப்புக்கு எதிராக இதே ஸ்டைலில் ஒரு கோல் அடித்தார். அப்பொழுது அவருக்கு வயது 33.
சரியாக ஏழு வருடம் கழித்து 40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ அதே ஸ்டைலில் அச்சு பிசுராமல் கோல் அடித்தது தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
40 வயதிலும் ஒரு துடிப்புள்ள இளைஞரை போல அவர் விளையாடுவதற்கு முக்கிய காரணம் அவருடைய உடலை அவர் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதால்தான். கிறிஸ்டியானோ ரொனால்டோவை பார்த்து உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
