சமீபத்தில் தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த இரண்டு திரைப்படத்தின் பட பூஜை சற்று முன்னர் நடந்து முடிந்தது. சோல்ஜர்ஸ் பேக்டரி என்கிற தயாரிப்பு நிறுவனமான அது இதுவரையில் டாப்லெஸ் டிக்கிலோனா விவாஹ போஜனம்பு மற்றும் பார்க்கிங் என நான்கு திரைப்படங்களை தயாரித்து இருந்தது. இந்தத் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கே எஸ் சினிஸ் ஆவார்.

பார்க்கிங் திரைப்படத்தை தொடர்ந்து சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது திரைப்படத்தின் பூஜை சற்று முன்னர் நடந்து முடிந்தது. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஐந்தாவது படத்தின் பெயர் சூப்பர் ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்,சாண்டி மாஸ்டர், நடிகை தேஜு அஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் வேணுகோபால் இயக்க இருக்கிறார்.

 

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஆறாவது திரைப்படத்தின் பெயர் நிஞ்சா என்று சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் அறிமுக நடிகர் பரத் மற்றும் நடிகை பிரதன நாதன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை டோரா திரைப்படத்தை இயக்கிய முருகு இயக்குகிறார். இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் திரைப்படத்திற்கு இசையமைப்பது கூடுதல் தகவல்.

இந்த இரண்டு திரைப்படத்தின் பூஜை விழா ஒரே இடத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. பூஜையில் நடிகர் ஆர்யா, சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா, கவின். இயக்குனர் வெங்கட் பிரபு, நெல்சன் என திரை திரையை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

https://x.com/SoldiersFactory/status/1992819943138902075?t=q0BHF7yDkezGQWxiH2Qt7A&s=19

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version