குஜராத்தில் உள்ள தோலேராவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தாய்வானை சேர்ந்த PSMC நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவின் முதல் குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை பிரம்மாண்டமாக கட்டமைத்துக் கொண்டு வருகிறது. இந்த ஆலை கட்ட மொத்தமாக முதலீடு செய்யப்பட்ட தொகை கே 91,000 கோடி.

Semiconductors என்று அழைக்கக்கூடிய குறைகடத்திகள், “கணினிகள் மற்றும் பல மின்னணு சாதனங்களில் பயன்படும் டிரான்சிஸ்டர்கள், டையோடுகள் போன்ற மின்னணு பாகங்களை உருவாக்க அடிப்படையாகப் பயன்படுகின்றன.

இந்தியாவின் முதல் குறைக்கடத்தி ஆலை வருகிற 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை குறை கடத்திகள் உற்பத்தி செய்ய துவங்கும் என்றும் சுமார் 20,000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இந்த ஆலையின் மூலம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் குறைந்தபட்சம் 50,000 குறைக்கடத்தி செதில்கள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் உள்ள தோலேராவில் இண்டஸ்ட்ரியல் சிங்கப்பூரை காட்டிலும் மிகப்பெரிய அளவில் ஸ்மார்ட் சிட்டி வரப்போகுது கூடுதல் தகவல். 200 உலகளாவிய தொழில்கள் இந்த நகரத்திற்கு வர உள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி நகரம் 929Sq கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட மிகப்பெரிய நகரமாக கூடிய விரைவில் உருவெடுக்கப் போகிறது. இதில் 420 Sq கிலோமீட்டர் பரப்பளவு தனியாக திட்டமிடப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதும்கூடுதல் தகவல்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version