நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில், 200 ரன்களுக்கும் குறைவான இலக்கை நிர்ணயித்து, அதனை வெற்றிகரமாக டிபெண்ட் செய்த  முதல் மற்றும் ஒரே அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது.

கடந்த சில போட்டிகளாகவே சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்து வருகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களிலும் எதிரணியைக் கட்டுப்படுத்தி வெற்றி காண்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 192 ரன்களைக் குவித்தது. பின்னர் 193 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணியை, சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே திணறடித்தனர்.

குறிப்பாக நூர் அகமதுவின் அபாரமான சுழற்பந்துவீச்சால் கொல்கத்தா அணி 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அணி சமபலத்துடன் உள்ளதால், வரும் போட்டிகளிலும் சிஎஸ்கே-வின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version