சர்வதேச கிரிக்கெட்டில் 13,000 ரன்களை குவித்த தெ.ஆப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் காத்திருக்கிறார் அந்த அணி வீரர் குயின் டி ஹாக்.
இதுவரை 309 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஹாக் விளையாடியுள்ளார். இதில் 12,924 ரன்களை சேர்த்துள்ளார். 13,000 ரன்களை சேர்க்க இன்னும் அவருக்கு மேலும் 76 ரன்கள் தேவைப்படுகின்றன.
ராஞ்சியில் நடந்த இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இன்று 2வது போட்டியில் 2 அணிகளும் மோதுகின்றன. மேலும் ஒரு ஒருநாள் போட்டியும் உள்ளது.
இந்த 2 போட்டிகளிலும் அவர் 76 ரன்களை சேர்க்கும்பட்சத்தில், 13,000 ரன்களை குவித்த தெ.ஆப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் 7வது வீரராக இடம்பிடிப்பார். இதுவரை காலிஸ், டி வில்லியர்ஸ், ஆம்லா உள்ளிட்ட 6 தெ.ஆப்பிரிக்க வீரர்கள் 13,000 ரன்களை குவித்துள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக காலிஸ் 25,422 ரன்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.
