ஐரோப்பிய நாடுகளுடன் நேருக்கு நேராக ரஷ்யா போரிடத் தயார் என்று அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையேயான  போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இதில் உக்ரைனுக்கு ஆயுத உதவி, பொருளாதார உதவி உள்ளிட்ட உதவிகளை ஐரோப்பிய நாடுகள் அளித்து வருகின்றன. இதற்கு ரஷ்யா பலமுறை எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய புதின், “ஐரோப்பிய நாடுகளுடன் போரிட ரஷ்யா எந்த திட்டமும் தீட்டவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இதற்கு திட்டம் தீட்டி, தயாராக இருந்தால், அதற்கு தற்போது ரஷ்யா தயாராக உள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு அந்நாடுகள் விரும்பவில்லை. நாங்கள் விரும்பாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன. பிரச்னைக்கு தீர்வு காணும் டிரம்பின் முயற்சிக்கு அந்நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கின்றன. இந்த போரில் ஒரு சார்பான நிலைப்பாட்டை (உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு) அந்த நாடுகள் கொண்டுள்ளன.

ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு உக்ரைனுக்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுப்போம். உக்ரைன் துறைமுகங்கள், கப்பல்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம். கடற்பகுதியுடனான உக்ரைன் தொடர்பை துண்டிப்போம்” எனக் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version