Close Menu
    What's Hot

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»“ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!
    விளையாட்டு

    “ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!

    Editor web3By Editor web3March 16, 2026Updated:March 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kamran akmal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை, அந்த நாட்டின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    வங்காளதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது. நேற்றைய  கடைசிப் போட்டியில் 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கம்ரான் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலையை நினைத்து வேதனை தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட்டை நீங்கள் ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டீர்கள். இப்போதுள்ள நிலையில் நெதர்லாந்து அணி கூட நம்முடன் விளையாடி, நம்மைத் தோற்கடித்து டெஸ்ட் அந்தஸ்து பெற நினைக்கும். களத்தில் உங்களால் ஒரு தொடரை வெல்ல முடியவில்லை என்றால், அப்புறம் எப்படி முன்னேறுவீர்கள்? இருதரப்பு தொடரையே வெல்ல முடியவில்லையென்றால், இனிமேல் ஐசிசி கோப்பைகளைத் திருடிக்கொண்டுதான் வீட்டுக்கு வரப்போகிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

    மேலும், முக்கியமான போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த கேப்டன் ஷாகீன் அப்ரிடியின் முடிவையும் அவர் விமர்சித்தார். “பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஏன் முதலில் பந்துவீசினார்கள்? வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடியதால் 290 ரன்களோடு அவர்கள் நின்றனர், இல்லையென்றால் 350 ரன்களை எட்டியிருப்பார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பாகிஸ்தான் அணியின் போட்டிகளை இனி ஒரு சீரியஸான ஆட்டமாக பார்க்க முடியாது. இது ஒரு காமெடி சீரிஸ் போல் ஆகிவிட்டது என்றும் விமர்சித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரசகுல்லா சாப்பிட்டவர் மரணம்!. உணவு சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்வது?.
    Next Article 400 பேர் பலி!. பாகிஸ்தான் செய்தது போர்க்குற்றம்!. ரஷீத் கான் வருத்தம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    July 5, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.