Close Menu
    What's Hot

    மக்கள்தொகை கணக்கெடுப்பு: அதிகாரிகள் இடமாற்றம் ஆக. 31 வரை தடை..!! அரசு அதிரடி உத்தரவு..!!

    ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த அமெரிக்கா.. பதிலுக்கு குவைத், பஹ்ரைனில் அமெரிக்க தளங்களை குறிவைத்த ஈரான்.!!

    தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»உலகக்கோப்பை கால்பந்து: மொராகோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!
    விளையாட்டு

    உலகக்கோப்பை கால்பந்து: மொராகோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

    Editor web1By Editor web1July 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தில், மொராகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரான்ஸ் மற்றும் மொராகோ அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றன. இந்தநிலையில், ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே தவறவிட்டார். மொராகோ அணியின் கோல்கீப்பர் யாசின் போனோ அதனை சாதுரியமாகத் தடுத்தார். இதனால் முதல் பாதி 0-0 என சமனில் முடிந்தது.

    போட்டியின் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆட்டத்தில் தீவிரமாக செயல்பட்டது. ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம்பாப்பே ஒரு கோல் அடித்து தனது முந்தைய ஏமாற்றத்திற்குப் பதிலடி தந்து, அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுத்தந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, அதாவது ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரரான உஸ்மானே டெம்பேலே தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 2-வது கோலை அடித்தார்.

    இறுதிவரை மொராக்கோ அணியின் கோல் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஸ்பெயின், பெல்ஜியம் மோதும் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை,  அரையிறுதியில் பிரான்ஸ் அணி எதிர்கொள்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4-வது டி20: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!
    Next Article தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் காலமானார்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!
    Editor web1
    • Website

    Related Posts

    4-வது டி20: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!

    July 10, 2026

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    July 9, 2026

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்கள்தொகை கணக்கெடுப்பு: அதிகாரிகள் இடமாற்றம் ஆக. 31 வரை தடை..!! அரசு அதிரடி உத்தரவு..!!

    ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த அமெரிக்கா.. பதிலுக்கு குவைத், பஹ்ரைனில் அமெரிக்க தளங்களை குறிவைத்த ஈரான்.!!

    தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

    தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் காலமானார்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

    உலகக்கோப்பை கால்பந்து: மொராகோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.