கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகக் கருதப்படும் ரோஜர் பெடரரை லண்டனில் நேரில் சந்தித்துப் பேசினார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், போட்டியைக் காண சென்ற இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கள், டென்னிஸ் முன்னாள் வீரர் ரோஜர் பெடரரை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளின்போதும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் போதும் இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். விளையாட்டு உலகைச் சேர்ந்த இரு பெரும் நட்சத்திரங்கள் நேரில் சந்தித்துக் கொண்ட இந்த நிகழ்வு, ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. பெடரருடன் உரையாடிய தருணங்களைச் சச்சின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“விளையாட்டின் இரு துருவங்கள் ஒரே இடத்தில்!” என்று ரசிகர்கள் இந்தச் சந்திப்பைக் கொண்டாடி வருகின்றனர்.
