இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், நாளை இரு அணிகளுக்கும் இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்-க்கு உட்பட்ட தொஅட்ர் என்பதால், இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த நிலையை இந்திய அணி இந்த வருடம் மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. முதல் போட்டிக்கு தயாராகும் இந்திய அணியினர் லீட்சில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.