இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் நாளை (19.06.2025) முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. ரோகித், விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி, எப்படி விளையாட போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் பந்துவீச்சு கூட்டணியை முன்னணி வீரரான பும்ரா வழிநடத்தவுள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியுமா என்பது கேள்வி தான். இருப்பினும் அவர் விளையாடும் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் பும்ரா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.

அதே ஃபார்மோடு தொடரும் பட்சத்தில் அது இங்கிலாந்து அணி திணற வாய்ப்புள்ளது. இந்த நிலையில், பும்ராவை பார்த்து தங்களுக்கு பயமில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், “எந்த பயமும் இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில், நீங்கள் எப்போதும் தரமான எதிரணியை எதிர்கொள்வீர்கள். பும்ராவின் திறமையும் அவரால் தம்முடைய அணிக்கு என்ன கொண்டு வர முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும். ஆனால் பயத்தின் அடிப்படையில் நிச்சயமாக இல்லை.

ஒரு பந்து வீச்சாளரால் மட்டுமே தனியாளாக தொடரை வென்று கொடுக்க முடியும் என்று நான் கருதவில்லை. வெற்றிக்கு அனைத்து வீரர்களும் அசத்த வேண்டும். 2 அணிகளிலுமே வெறும் ஒரு வீரர் மட்டுமே வெற்றிக்கு காரணமாக அமைவார் என்று நான் கருதவில்லை” எனக் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version