ஐசிசி  ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களை விளையாடுவதற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.ஓடிஐ தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டாவது ஓடிஐ போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது. வதோதரா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்திாயசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 5 ஓடிஐ இன்னிங்ஸில் விராட் கோலி சிறப்பான பார்மை வெளிக்காட்டி வருகிறார். 74*, 135, 102, 65*, 93 என 469 ரன்களை குவித்துள்ளார். அதேநேரத்தில், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் முறையே 131, 77 ரன்களை அடித்தார். விராட் கோலி டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், ஓடிஐ போட்டிகளில் மட்டும் அவர் விளையாடி வருகிறார். இருப்பினும், நிச்சயம் 2027 ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு  மீண்டும் மைல்கல் வரலாறு படைத்துள்ளார். அதாவது, ஐசிசி ஓடிஐ பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் கடைசியாக 2021ஆம் ஆண்டு ஏப். 2ஆம் தேதி அன்று விராட் கோலி அவரது முதலிடத்தை பறிகொடுத்தார். தற்போது ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி, விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். 2017ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டுவரை என மொத்தம் 4 ஆண்டுகள் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். அப்போது 2021ஆம் ஆண்டில் பாபர் அசாம் முதலிடத்தை பறித்தார். பாபர் அசார் 2025ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்த நிலையில், 2025 தொடக்கத்தில் ரோஹித் சர்மா முதலிடத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா தற்போது இரண்டு இடங்கள் பின்னடைவை சந்தித்து 775 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் ஓரிடம் முன்னேறி 784 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 785 புள்ளிகளுடன் ஓரிடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியை பொருத்தவரை, கேப்டன் சுப்மான் கில் 725 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 682 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், கேஎல் ராகுல் 854 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்குன் 100வது இடத்தில் 411 புள்ளிகளுடன் அக்சர் பட்டேல் உள்ளார், வேறு இந்தியர்கள் யாருமே முதல் 100 இடங்களில் இல்லை. கடந்தாண்டு முதலிடத்தில் இருந்து இறங்கிய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தற்போது 722 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version